பெங்களூரு, பெங்களூருவில் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- குடிநீர் நோக்கத்துக்காக மேகதாது அணை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதை தமிழகம் அரசியல் நோக்கத்தில் எதிர்ப்பது சரியல்ல. பெங்களூருவில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். இந்த திட்டத்தால் தமிழகமும் பயன்பெறும். அதனால் கர்நாடகத்துக்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கர்நாடகத்தில் மழை பற்றாக்குறையால் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. அடுத்த 3, 4 மாதங்களில் போதிய மழை பெய்யாவிட்டால் அடுத்த ஆண்டு கோடை காலம் வரை குடிநீருக்கு தேவையான நீரை எந்த ஆதாரங்களில் பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். புதிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமங்களில் வேலை கேட்டு வந்தவர்களுக்கும் இந்த வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 318 பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் செயல் திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் மனித வேலை நாட்கள் உருவாக்கப்படும். மாதம் 1.25 கோடி மனித வேலை நாட்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள் ளோம். கர்நாடகத்துக்கு முதல் காலாண்டில் ரூ.2 ஆயிரத்து 900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனா ளிகள் ஒவ்வொரு வருக்கும் 125 நாட்கள் வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/tamil-nadu-will-also-benefit-from-the-mekedatu-project-interview-with-karnataka-minister




