8 அணிகள் இடையிலான 10-வது பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை துபாயில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்றிரவு அறிவித்தது. துபாய், 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், தாய்லாந்து அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். 7 முறை சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 30-ந்தேதி தாய்லாந்துடன் மோதுகிறது. செப்டம்பர் 3-ந் தேதி ஹாங்காங்கையும், 5-ந் தேதி பரம எதிரியான பாகிஸ்தானையும் சந்திக்கிறது. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-cricket-to-begins-on-august-28-in-dubai




