பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் மூத்த சகோதரர் ஸ்ரீ வதன் தனக்கும், தனது சகோதரருக்கும் (பிரம்மானந்தம்) இடையேயான உறவு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் பிரம்மானந்தத்தின் சகோதரர் ஸ்ரீ வதன்," நாங்கள் உடன்பிறந்தவர்கள். நான்கு பேர் இறந்துவிட்டனர், இப்போது நாங்கள் இருவர் மட்டுமே எஞ்சியிருக்கிறோம். பிரம்மானந்தம் எங்கள் சொந்த ஊரில் நான் மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறேன். சமீபத்தில் அவர் இந்த ஊருக்கு வந்திருந்தார், ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றுவிட்டார். `ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன? 'அண்ணா, எப்படி இருக்கிறாய்?' என்று எனது தம்பி என்றாவது ஒரு நாள் போன் செய்து கேட்பான் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் அவர் எனக்கு போன் செய்வதே இல்லை. அவர் ஒரு பெரிய நடிகர். படப்பிடிப்புகளில் அவர் பிஸியாக இருக்கலாம், ஆனால் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி போன் செய்து பேசக் கூடாதா? பெரிய மனிதர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://cinema.vikatan.com/tollywood/brahmanandams-elder-brother-opens-up-about-their-relationship




