கர்நாடகா மாநிலம் தார்வாடு என்ற இடத்தில் வசித்தவர் டாக்டர் கிரண். இவரது மனைவி பிரியங்கா. இவரும் டாக்டர் ஆவார். இத்தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கிரண் உறவினர்கள் அடிக்கடி டாக்டர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். நேற்று கிரணின் உறவினர்கள் கிரணை போனில் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கிரண் மனைவியைத் தொடர்பு கொண்டனர். ஆனால் பிரியங்கா தனது கணவர் உறங்கிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன் பிறகு மாலையில் தொடர்பு கொண்டபோது அவர் வேலைக்குச் சென்றுவிட்டதாக பிரியங்கா தெரிவித்தார். கிரணை போனில் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து உறவினர்கள் நேரடியாக கிரணைப் பார்க்க அவரது வீட்டிற்கு வந்தனர். வீட்டில் கிரண் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சற்று தூரத்தில் 8 வயது மகன் கத்திக்குத்துக்காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். உடனே அவர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும், ஹுப்பள்ளி-தார்வாட் போலீஸ் கமிஷனர் என். சசிகுமார் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த சிறுவன் இன்னும் சுவாசித்துக்கொண்டிருப்பதைக் கவனித்து, அவனை அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து சசிகுமார் கூறுகையில், ''ஒரு அறையில் டாக்டர் கிரண் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். 8 வயது சிறுவனும் கத்தியால் குத்தப்பட்டிருந்தான். அந்தச் சிறுவன் சரியாக எப்போது தாக்கப்பட்டான் என்பதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அவன் உயிருடன் இருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றினோம். சம்பவம் எப்போது நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது அதிர்ச்சியில் இருக்கும் டாக்டர் மனைவி முன்னுக்குப் பின் முரணான மற்றும் வழக்கத்திற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். கொலைக்கான காரணத்தை அறிய இரு குடும்பத்தினரிடமிருந்தும் விவரங்களைச் சேகரித்து வருகிறோம்'' என்றார். முதற்கட்ட விசாரணையின்படி, சம்பவத்தின்போது அந்த வீட்டில் கணவர், மனைவி மற்றும் குழந்தை மட்டுமே இருந்துள்ளனர். வெளியாட்கள் யாரும் வீட்டிற்குள் நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என்றும் அவர் கூறினார். கணவர் மற்றும் மகனின் உடல்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அவரது மனைவி தரையில் படுத்துக்கொண்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி வீடியோ ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்தக் கொலையில் டாக்டர் பிரியங்காவுக்குத் தொடர்பு இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள போதிலும், போலீசார் அவர்களது குற்றச்சாட்டை உறுதிப்படுத்தவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், குடும்பத் தகராறு காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சபரி வர்மன் லாக்கப் கொலை: "சிலரைக் காப்பாற்றுவதற்காக கைதிகள் மீது வழக்கு" - கனிமொழி குற்றச்சாட்டு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/crime/husband-in-bloodshed-son-fighting-for-life-with-knife-mother-was-looking-at-cell-phone




