சென்னை, பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “பிரதமர் மோடியின் 138-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் மணப்பாறையைச் சேர்ந்த ஆ.செல்வராஜின் தொன்மையான சிற்பங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களைத் தேடி, பாதுகாக்கும் அர்ப்பணிப்பான பணியை பிரதமர் குறிப்பிட்டது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பையும், நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் மக்களின் அர்ப்பணிப்பையும் நாடறியச் செய்த பிரதமர் அவர்களுக்கு நன்றி. நம் பாரம்பரியம், நம் பெருமை!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thanks-to-prime-minister-modi-for-making-the-nation-aware-of-tamil-nadus-historical-significance-tamilisai-soundararajan




