சனா, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. அதேவேளை, அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியை கடப்பதாக சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் கப்பல்களில் பயணிக்கும் இந்திய மாலுமிகள் பலர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் வளைகுடா பகுதியில் செங்கடலில் செல்லும் சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது. ஈரானுக்கு செல்லும் கப்பல்கள் மீதும் ஈரானில் இருந்து வரும் கப்பல்கள் மீதும் அமெரிக்க கடற்படையும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய கப்பல் மீது தாக்குதல் இந்நிலையில், ஏமன் அருகே செங்கடலில் சென்றுகொண்டிருந்த இந்திய சரக்கு கப்பல் மீது இன்று ஏவுகணை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் பயணித்த இந்திய மாலுமிகள் 13 பேர் உள்பட 14 மாலுமிகள் ஏமன் கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்திய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது யார்? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. ஏமன் கடற்பகுதியில் சென்ற இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது ஹவுதி கிளர்ச்சியாளர்களா? ஈரானா? அமெரிக்காவா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை,இந்திய சரக்கு கப்பல் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/india-flagged-vessel-sinks-off-yemen-after-red-sea-attack-13-crew-members-rescued




