சென்னை, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன், கேஸ் சிலிண்டர் ரசீது இணைப்பது கட்டாயம் இல்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு, மாவட்ட அளவில் இ-சேவை மையங்கள் மூலம் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். இதனுடன் கண்டிப்பாக கேஸ் சிலிண்டர் இணைப்பிற்கான ரசீது வைக்க வேண்டும் என அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர். ரேஷன் கார்டு பெற்ற பின்னர்தான், கேஸ் சிலிண்டர் இணைப்பே பெற முடியும் என்ற நிலையில், இந்த உத்தரவால், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்க முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அரசுக்கு பலதரப்பில் இருந்தும் புகார் சென்றது. இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், "புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது, கேஸ் சிலிண்டர் இணைப்பிற்கான ரசீது கட்டாயம் இல்லை. அதனை இணைக்க வேண்டும் என எந்த உத்தரவும் வெளியிடவில்லை. ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்து, 60 நாட்களுக்கு பின்னரே கிடைக்கும். அதே நேரம் விண்ணப்பத்துடன் குடும்ப உறுப்பினர் அனைவரின் ஆதார் அட்டையை கட்டாயம் பதிவேற்ற வேண்டும். ஆதார் அட்டையுடன் சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது, கேஸ் சிலிண்டர் ரசீது இருந்தால் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/new-ration-card-no-gas-cylinder-bill-required-key-info




