வேலூர், வேலூர் காட்பாடி காந்திநகரில் தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 'யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களுக்கு பின்னாடி யாரும் வர மாட்டார்கள் என்று தான் சொல்வார்கள். அவ்வாறு தான் த.வெ.க. உறுப்பினர்கள் தி.மு.க. இனி வெல்ல முடியாது என்று கூறுகின்றனர். இப்படித்தான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கூறினர். அவர்களையும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதெல்லாம் அரசியல் ஞானத்தோடு சொல்லும் சொல் அல்ல. என் மேஜையில் 3 பைல்கள் உள்ளது. அதனை திறக்க வைத்து விடாதீர்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறியதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தைரியம் இருந்தால் அந்த பைல்களை திறந்து, யார் மீது குற்றம் இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்று கூறி உள்ளார். அந்த பைலை திறக்க கூறி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும். ஒரு வாரத்திற்குள் திறக்கவில்லை என்றால் சட்டசபைக்கு முதல்-அமைச்சர் தவறான தகவலை கொடுத்தார் என உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும். எதிர்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்கு செல்ல வேண்டும். ஆளும் கட்சிக்காரன் கேடயத் தோடு வரவேண்டும். இவன் சுழற்றுவான். அவன் தடுக்க வேண்டும். தடுக்க முடிந்தால் தடுக்கணும் இல்லையென்றால் சலாம் போட்டு விட்டு செல்ல வேண்டும். இதுதான் சட்டசபை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-chief-minister-must-release-three-files-within-a-week-duraimurugan




