உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற அறிவியல் புனைவு திரைப்படம் ‘டூன்’. இப்படத்தின் முதல் இரு பாகங்கள் முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மணல் கிரகமான அராக்கிஸ் மீதான அதிகாரப் போராட்டம், அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அங்குள்ள ஆபத்தான ஜீவராசிகளை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய வம்சத்தின் இளவரசன் சதியால் அனைத்தையும் இழந்து பாலைவனத்தில் தஞ்சமடைவான். பின்னர், அங்குள்ள பாலைவனப் பழங்குடிகளின் தலைவனாகும் அவன், தன் எதிரிகளைப் பழிவாங்கி பேரரசனாக மீண்டும் எழுவதே டியூன் படத்தின் முதல் இரு பாகங்களின் கதை. 1965-இல் பிராங்க் ஹெர்பெர்ட் எழுதிய அறிவியல் புனைவுக் கதையான ‘டூன்’ நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. டெனிஸ் வில்லெனுவ் இயக்கிய இப்படத்தின் நாயகனாக டிமோதி ஷலமேட் மற்றும் நாயகியாக ஸெண்டாயா நடித்துள்ளனர். ‘டூன் 3’ திரைப்படம், இரண்டாம் பாகம் முடிந்த இடத்திலிருந்து பால் அட்ரைடீஸின் கதையை தொடர்ந்து சொல்லுகிறது. பேரரசராக உயர்ந்த பால், தனது ஆட்சியை எவ்வாறு நிலைநிறுத்துகிறார் மற்றும் உலகளவில் உருவாகும் போர்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. டீசரில் இடம் பெற்றுள்ள அராக்கிஸ் கிரகத்தின் காட்சிகளும், அதில் இடம்பெறும் பிரமாண்ட போர்க்காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்த படத்தில் டிமொத்தி சாலமேட், ஜெண்டயா, புளோரன்ஸ் பியூ, அன்யா டெய்லர்-ஜாய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்டோபர் 2021-ல் வெளியான முதல் பாகம் 6 ஆஸ்கர் விருதுகளையும், மார்ச் 2024-ல் வெளியான இரண்டாம் பாகம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், ‘டூன்’ படத்தின் மூன்றாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. “Forgive me for all I’ve done.” Experience the epic conclusion. Dune: Part Three only in theaters and IMAX December 18. — DUNE (@dunemovie) July 8, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dune-film-3rd-part-trailer-out




