இன்றைய போட்டி உலகில் எல்லாத் துறைகளிலும் ஏராளமான போட்டியாளர்கள் உருவாகிவிட்டார்கள். சுமார் ஆயிரம் பேர்கள் தேவை என்றால் அதற்கு லட்சக்கணக்கான போட்டியாளர்கள் போட்டி போட்டு விண்ணப்பம் அனுப்புகிறார்கள். இவர்களில் யாரை தேர்வு செய்வது? எப்படி தேர்வு செய்வது? எந்த அடிப்படையில் சரியான நபர்களை இனம் கண்டு கொள்வது? என பல கேள்விக்குறிகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கெல்லாம் சரியான விடையை கண்டுபிடிப்பது சிரம மட்டுமல்ல. சில வேளைகளில் சிக்கல்களையும் உருவாக்கி விடுகிறது. போட்டிகள் பலவிதம் பள்ளிகளில் படிக்கும் போது பலவித போட்டிகளை, சவால்களை எவ்வாறு சந்திக்க வேண்டும் என ஏராளமான பயிற்சிகளை வழங்குகிறார்கள்.விளையாட்டுத்துறையில், அறிவியல் துறையில், தொழில்நுட்பத் துறையில், சைபர் செக்யூரிட்டி துறையில், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் துறையில், கம்ப்யூட்டர் துறையில் என ஏராளமான துறைகளில் மாணவ மாணவிகளுக்கு தேவையான பயிற்சிகளையும் போட்டிகளை சமாளிக்க தேவையான யுக்திகளையும் கற்றுத் தருகிறார்கள்.மேலும், புதுமைகளை புகுத்தும் வகையில் வணிகத்தில் பங்குச்சந்தை மற்றும் முதலீடு (STOCK AND INVESTMENT), வணிக உலகத்தின் புரிந்து கொள்ளும் வகையில் கேஸ் ஸ்டடிஸ் ( CASE STADIES), பிசினஸ் பிளான் காண்டஸ்ட் (BUSINESS PLAN CONTESTS) ஆகிய துறைகளில் நுணுக்கங்களையும் பயிற்சிகளாக வழங்குகிறார்கள்.இவைகள் தவிர, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, சிறுகதை போட்டி, ஊடக துறை போட்டிகள், விவாத அரங்கம்-என ஏராளமான விதங்களில் மாணவ மாணவிகளுக்கு உரிய பயிற்சிகள் பள்ளியில் வழங்கப்படுகிறது.கலைத்துறையில் போட்டி மனப்பான்மையை நல்ல விதத்தில் உருவாக்க டிஜிட்டல் கிராபிக்ஸ், புகைப்படக்கலை, ஓவியக்கலை, பொருட்களை வடிவமைத்தல் (PRODUCT DESIGN), இசை கருவிகள் இசைத்தல் போட்டிகள், வாய்ப்பாட்டுப் போட்டிகள்-என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்தப் போட்டிகள் எல்லாம், போட்டி நிறைந்த உலகில் எவ்வாறு போட்டிகளை சந்திக்க வேண்டும்? வெற்றி பெறுவதற்கான வியூகங்களை எவ்வாறு வகுக்க வேண்டும்? சரியான திட்டமிடலை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? தேவையான பயிற்சிகளை எந்த முறையில் கையாள வேண்டும்?- என்பதை மாணவ மாணவிகளுக்கு தெளிவான முறையில் கற்றுத் தருகிறது.பாடங்களை ஒழுங்காக படிக்கவும், நேர்த்தியான முறையில் தேர்வுகளை எழுதவும், வகுப்பில் கற்றல் திறனை வளர்த்துக் கொள்ளவும் பள்ளி கல்லூரிகளில் வழங்கப்படும் சிறப்பான பயிற்சிகள் மாணவ உள்ளங்களை பண்படுத்துகின்றன.போட்டிகளை நேர்மையுடன் எதிர் கொள்ள மன தைரியத்தையும், சவால்களை சந்திக்கும் திறமையையும் கற்றுத் தருகின்றன.பள்ளி,கல்லூரிகளில் இந்த போட்டிகளை (COMPETITIONS) எல்லாம் வாய்ப்புகளாக (OPPORTUNITIES) நினைத்து எதிர்கொள்பவர்கள், எதிர்காலத்தில் மிகச் சிறந்த வெற்றியைப் பெறுகிறார்கள். போட்டித் தேர்வுகள் (COMPETITIVE EXAMINATIONS). உலகம் முழுவதும் ஏராளமான போட்டித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் மேற்படிப்பு படிப்பதற்கும், வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.போட்டித் தேர்வுகளை பொதுவாக இருவகையாக பிரிக்கலாம். அவை, 1. கல்வி சார்ந்த போட்டித் தேர்வுகள் (ACADEMIC ORIENTED COMPETITIVE EXAMINATIONS) 2. தொழில் சார்ந்த போட்டித் தேர்வுகள் (CAREER -ORIENTED COMPETITIVE EXAMINATIONS)-ஆகும். நுழைவுத் தேர்வு- சிறப்பு பார்வை. நுழைவுத் தேர்வு அல்லது போட்டி தேர்வு கண்டிப்பாக தேவை என பல கல்வியாளர்களும், ஆய்வாளர்களும் விமர்சகர்களும் தெரிவிக்கிறார்கள்.அவர்கள் சொல்லும் காரணங்கள் இவைதான். 1. நுழைவு தேர்வு போட்டியாளரின் தகுதியை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. 2. போட்டியாளரின் புரிதல் திறன், விமர்சன ரீதியான சிந்தனை, சிக்கல்களை தீர்க்கும் திறன்- ஆகியவற்றை புரிந்து கொள்ளும் வகையில் நுழைவு தேர்வு அமைகிறது. 3. கல்வித்துறையிலும் தொழில் துறையிலும் எதிர்காலத்திற்கு தேவையான மென் திறன்களை (SOFT SKILLS) வளர்த்துக் கொள்ளவும் ஆளுமை திறன்களை (PERSONALITY TRAITS) அதிகரிக்கவும் இந்த நுழைவு தேர்வு உதவுகிறது. 4. போட்டி உலகை தைரியம் உடனும் நம்பிக்கையுடனும் சந்திக்கும் மனப்பான்மையை அதிகரிக்கிறது. 5. நேர்மறையான எண்ணங்களை வளர்க்கவும், சவால்களை எதிர்கொள்ளும் பண்புகளை அதிகரிக்கவும் உதவுகிறது. 6. போட்டியாளர்கள் பலவித தேர்வுகளை எழுதுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதால் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை அவர்களால் உருவாக்க இயலும். 7. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் மற்றும் நிதி உதவியை பெறுவதற்கு இந்த போட்டி தேர்வு அடிப்படையாக அமைகிறது. 8. நுழைவுத் தேர்வுக்காக சிறப்பான தயாரிப்பு பணியில் ஈடுபடுவதால் பாடம் சம்பந்தப்பட்ட அடிப்படை கருத்துக்களை தொடர்ந்து கற்கும் நிலை ஏற்பட்டு அந்த பாடங்களில் சிறந்து விளங்கவும் வாய்ப்பு உள்ளது. 9. நுழைவுத் தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அளவிலும் உலக அளவிலும் சிறப்பான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது 10. நுழைவு தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் நேர மேலாண்மை, ஒழுக்கம், விடா முயற்சி, -ஆகிய வாழ்க்கைக்கு தேவையான முக்கிய திறன்களை வளர்க்க அருமையான வாய்ப்பை பெறுகிறார்கள். 11. மன உறுதி, கடின உழைப்பு, சவால்களை சந்திக்கும் மனநிலை-ஆகியவை நுழைவுத் தேர்வில் சிறப்பான பயிற்சி பெற்றவர்களுக்கு நிச்சயம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, 1. தேசிய அளவிலான (NATIONAL LEVEL) நுழைவுத் தேர்வுகள். 2. மாநில அளவிலான (STATE LEVEL) நுழைவுத் தேர்வுகள். 3. பல்கலைக்கழக அளவிலான (UNIVERSITY LEVEL) நுழைவுத் தேர்வுகள். 4. தொழில் முறை தகுதிக்கான. ( PROFESSIONAL QUALIFYING) நுழைவு தேர்வுகள். 5. திறன் ஆக்கபூர்வமான (APTITUDE /CREATIVE) நுழைவு தேர்வுகள். என 5 வகையாக பிரித்துக் கொள்ளலாம். 1. தேசிய அளவிலான (NATIONAL LEVEL) நுழைவுத் தேர்வுகள். தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் இந்தியா முழுவதும் நடத்தப்படும் தேர்வாகும். மத்திய அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு, கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் தேர்வாக அமைகிறது "ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்"தேர்வு (JOINT ENTRANCE EXAMINATION)( JEE), "நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்" (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) (NEET) "நீட் "தேர்வு, காமன் யூனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட் (COMMON UNIVERSITY ENTRANCE TEST) (CUET) 'க்யூட் "தேர்வு-போன்ற தேர்வுகள் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வாகும். 2. மாநில அளவிலான (STATE LEVEL) நுழைவுத் தேர்வுகள். இந்தியாவில் உளள ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதத்தில் இந்த நுழைவுத் தேர்வுகள் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நடத்தப்படும் டான்செட் (தமிழ் NADU COMMON ENTRANCE TEST) (TANCET)தேர்வு, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் "காமன் இனஜினியரிங் என்ட்ரன்ஸ் டெஸ்ட் அண்ட் அட்மிஷன் " (COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) (CEETA -PG) காராஷ்டிரா மாநிலத்தில் நடத்தப்படும் "மகாராஷ்டிரா காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட்"( MAHARASHTRA COMMON ENTRANCE TEST) (MHT CET), கர்நாடக மாநிலத்தில் நடத்தப்படும் "கர்நாடகா காமன் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்"(KARANATAKA COMMON ENTRANCE EXAM) (KCET), கேரள மாநிலத்தில் நடத்தப்படும் "கேரளா இன்ஜினியரிங் ஆர்க்கிடெக்சர் மெடிக்கல்"(KERALA ENGINEERING ARCHITECTURE MEDICAL)(KEAM),-போன்ற தேர்வுகள் மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் ஆகும். 3. பல்கலைக்கழக அளவிலான (UNIVERSITY LEVEL) நுழைவுத் தேர்வுகள். சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் தாங்கள் வடிவமைத்த பாடத்திட்டத்தின் கீழ் முக்கியமான படிப்புகளில் சேர்வதற்காக தனியாக நுழைவு தேர்வுகளை நடத்துகிறது. இந்த நுழைவு தேர்வுகளை பல்கலைக்கழக அளவிலான நுழைவு தேர்வுகள் என குறிப்பிடலாம். பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் அட்மிஷன் டெஸ்ட் (BIRLA INSTITUTE OF TECHNOLOGY AND SCIENCE ADMISSION TEST)(BITSAT), வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (VELLORE INSTITUTE OF TECHNOLOGY ENGINEERING ENTRANCE EXAMINATION)(VITEEE), எஸ்.ஆர். எம் ஜாயிண்ட் இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (SRM JOINT ENGINEERING ENTRANCE EXAMINATION)(SRMJEEE), அம்ரிதா இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் (AMRITA EGINEERING ENTRANCE EXAMINATION)(AEEE)-போன்ற தேர்வுக்கு பல்கலைக்கழக அளவிலான தேர்வுகளாகும். 4.தொழில் முறை தகுதிக்கான. ( PROFESSIONAL QUALIFYING) நுழைவு தேர்வுகள். இவ்வகை நுழைவுத்தேர்வுகள் நேரடியாக கல்லூரியில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் அல்ல. இந்த தேர்வுகள் சான்றிதழ்கள் அல்லது அரசு பணிகளுக்காக நடத்தப்படுகின்ற தேர்வுகள் ஆகும். தி இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்டென்ஸ் ஆப் இந்தியா (THE INSTITUTE OF CHARTERED ACCOUNTANTS OF INDIA)(ICAI) என்னும் அமைப்பு நடத்தும்" சி.ஏ பவுண்டேஷன் தேர்வு"(CA FOUNDATION), தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(தமிழ் NADU PUBLIC SERVICE COMMISSION) (TNPSC),டிஎன்பிஎஸ்சி தேர்வு, ஸ்டாப் செலக்சன் கமிஷன் (STAFF SELECTION COMMISSION)(SSC) நடத்தும் "கம்ப்ளைன்ட் ஹையர் செகண்டரி லெவல் "தேர்வு (COMBINED HIGHER SECONDARY LEVEL)(CHSL)-ஆகியவை தொழில் முறை தகுதிக்கான நுழைவுத் தேர்வுகள் ஆகும். 5.திறன்/ ஆக்கபூர்வமான (APTITUDE /CREATIVE) நுழைவு தேர்வுகள். திறன்களையும்,ஆக்கபூர்வமான சிறந்த பண்புகளையும் கண்டறியும் விதத்தில் அமைக்கப்படும் தேர்வு திறன் ஆக்கபூர்வமான (APTITUDE /CREATIVE) தேர்வுகள் ஆகும். குறிப்பாக, ஒருவரின் படைப்பாற்றல், வடிவமைப்பு சிந்தனை, பகுத்தறியும் திறன் போன்ற திறமைகளை கண்டறிய இந்த தேர்வு நடத்தப்படுகிறது அண்டர் கிராஜுவேட் காமன் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன் ஃபார் டிசைன் (UNDER GRADUATE COMMON ENTRANCE EXAMINATION FOR DESIGN)(UCEED) என்னும் நுழைவு தேர்வு," நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்"(THE NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY ENTRANCE EXAMINATION) என்னும் நுழைவு தேர்வு போன்றவைகள் ஒருவரின் தனித்திறமைகளை கண்டறிய நடத்தப்படும் தேர்வுகளாகும். நுழைவுத் தேர்வு-ஏற்படுத்திய மாற்றங்கள். கல்வித் துறையிலும், தொழில்துறையிலும் ஏராளமான மாற்றங்கள் நாள்தோறும் உருவாகி கொண்டு வருகிறது. இதனால், மாணவர் சேர்க்கைக்காக உயர்நிலை கல்விநிறுவனங்களில் நடத்தப்படும் கல்விசார் போட்டி தேர்வுகளிலும், தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்கள். குறிப்பாக. 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு, தொழில் முறை படிப்புகளுக்காக நடத்தப்படும் மாணவர் சேர்க்கை காண நுழைவுத் தேர்வில் முக்கிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. பொறியியல், மருத்துவம், சட்டம்,வடிவமைப்பு, கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட படிப்புகளில் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் முக்கியமாக பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுக்கும் நுழைவுத்தேர்வுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வில், பள்ளியில் கற்றுத்தந்த தெரிந்த கருத்துக்களின் அடிப்படையில் தெரிந்த கேள்விகள் (KNOWN QUESTIONS) இடம் பெறும். ஆனால்,,நுழைவுத்தேர்வில், தெரிந்த கருத்துக்களின் அடிப்படையில் தெரியாத கேள்விகள் (UNKNOWN QUESTIONS ) இடம் பெறும். முன்பெல்லாம், பாடத்திட்டங்களின் அடிப்படையில் மாணவ மாணவிகளின் மனப்பாட திறனை சோதிக்கும் விதத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், தற்போது நுழைவுத்தேர்வுகளில் பாடத்தில் உள்ள அனைத்து கருத்துக்களை புரிந்து கொள்ளும் விதத்திலும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்திலும் கேள்விகள் இடம் பெறுகின்றன. இதனால், மாணவ மாணவிகள் ஆரம்ப காலத்தில் இருந்து மிக கவனமாக படிக்க வேண்டியது அவசியமாகிறது. நுழைவுத்தேர்வு முறையிலும் ஏராளமான மாற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கொள் குறி வகை வினா அமைப்பில் (MULTIPLE CHOICE QUESTIONS)(MCQ) கேள்விகள் அமைக்கப்படுகின்றன. தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படுகின்றன. மேலும், இணைய வழி தேர்வு முறையும் (ONLINE EXAMINATION) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மிக கவனமாக பாடங்களை படித்து முறையான பயிற்சிகளை மேற்கொண்டவர்கள் தான் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற இயலும். இதனால்தான், நிறைய மாணவ, மாணவிகள் பள்ளி பருவத்திலேயே நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கிறார்கள். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நுழைவுத்தேர்வு எழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற காரணத்தினால் பல மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும், எதிர்காலம் எவ்வாறு அமையும்? என்ற கேள்விக்குறியோடு தங்கள் படிப்பை தொடர்வதால், பதட்டமும் வாழ்க்கையில் தடுமாற்றமும் ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் மிக ஆதரவு மனப்பான்மையோடு வழி நடத்த வேண்டும். போட்டியை கண்டு பயப்படும் மனநிலை கொண்டவர்களுக்கு பெற்றோர்கள் தான் சரியான வழிகாட்டியாக அமைய இயலும். உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் ஏற்படும் இந்த மாற்றங்களை பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் வழிகாட்டும் பெரியவர்களும் சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே எந்த தேர்வையும் எளிதில் சந்திக்கலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/education-and-employment/are-entrance-exams-necessary




