காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் தற்போது 734 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் சுமார் 3,000 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. உயிரிழப்பு அதிகரிப்பு நேபாளம்-திபெத் எல்லை அருகே கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று வரை 600-க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டன. இது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது. பரிதாப நிலை இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் மருத்துவமனை பிணவறைகளில் குவிந்துள்ளன. இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் மருத்துவமனை நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. 5-வது நாளாக மீட்புப்பணி அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்களில் தமிழர்கள் உள்பட 167 இந்தியர்களும் அடங்கியிருப்பதால் இந்தியாவிலும் தொடர்ந்து சோகம் நிலவி வருகிறது. போட்டேகோஷி இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழு வீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நேற்று வரை 4,451 பேரை மீட்டுள்ளனர். இந்நிலையில் போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்ததைத் தொடர்ந்து, மீட்புக் குழுக்களை விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் இந்த ஆறு, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின்போது பெருமளவிலான நீரை மத்திய நேபாளப் பகுதிக்குக் கொண்டு சென்றது. சர்வதேச ஆதரவு இந்நிலையில் நேபாள சுரங்கங்களில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் என்றும், 100க்கும் மேற்பட்ட நீர்மின் பணியாளர்களும் சிக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவும், சீனாவும் சிறப்பு மீட்புக் குழுக்களை அங்கு அனுப்பியுள்ளன. மறுசீரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு பில்லியன் கணக்கில் செலவாகும் என நேபாளம் கருதுகிறது. இதனால் சர்வதேச ஆதரவையும் நாடுகிறது. பனிப்பாறை இதனிடையே பனிப்பாறை கண்காணிப்பை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. பனிப்பாறை சரிவுடன் இந்த பேரிடர் தொடர்புபடுத்தப்பட்டதை அடுத்து, உத்தரகாண்ட் இமயமலைப் பனிப்பாறைகளையும் பனிப்பாறை ஏரிகளையும் கண்காணித்து வருகிறது. நேபாளத்திற்கு உலகளாவிய உதவிகள் குவிந்து வருகின்றன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச வனத்துறை ஆகியவை மனிதாபிமான உதவிகளுக்காக மில்லியன் கணக்கில் வழங்குவதாக உறுதியளித்துள்ளன. அதே நேரத்தில் சீனாவும் உதவி வழங்க முன்வந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/nepal-flash-flood-734-dead-2500-missing-bhotekoshi-river-water-level-rises-again



