நியூயார்க் ஜி20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்காவுக்கு வரும்படி ரஷிய அதிபர் புதினுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மியாமியில் வருகிற டிசம்பரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், கொரியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். புதினுக்கு அழைப்பு இந்நிலையில், நியூயார்க் நகரில், செய்தியாளர்களிடம் இன்று பேசிய அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ, ஜி20 மாநாட்டில் பங்கேற்க வரும்படி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நாங்கள் அழைத்திருக்கிறோம். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது. தவிர, உலக நாடுகளின் பிற தலைவர்களுடனும் அவர் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பாக இருக்கும். எங்களுடைய இந்த அழைப்பை அவர் ஏற்பார் என நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/us-invites-putin-to-attend-g20-summit




