திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எஸ்எஸ்டி டோக்கன் இல்லாத பக்தர்கள் 24 மணி நேரம் வரை காத்திருந்து பகவானை தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும். அவ்வகையில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில, தரிசன வரிசையானது சிலாதோரணத்திற்கு வெளியே வரை நீண்டு காணப்படுகிறது. காணிக்கை எவ்வளவு? திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) 78 ஆயிரத்து 721 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38 ஆயிரத்து 18 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 98 லட்சமாக பதிவானது. அன்று 4 லட்சத்து 37 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. அன்னபிரசாதம் 2 லட்சத்து 87 ஆயிரம் பக்தர்கள் பெற்ற நிலையில் 3 ஆயிரத்து 682 பேருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. சர்வதரிசனத்திற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட டோக்கன் (எஸ்.எஸ்.டி. டோக்கன்) இல்லாத பக்தர்கள் சர்வதரிசனத்திற்கு சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிருந்தது. 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் இதேபோல் நேற்று (சனிக்கிழமை) 84 ஆயிரத்து 488 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 37 ஆயிரத்து 61 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 78 லட்சமாக பதிவானது. 4 லட்சத்து 28 ஆயிரம் லட்டுகள் விற்பனையாகின. 2 லட்சத்து 74 ஆயிரம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றனர். 3 ஆயிரத்து 789 பேருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத பக்தர்கள் சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/devotional/devotees-waited-24-hours-for-darshan-at-tirumala-temple




