சேலம், சேலம் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்திற்கும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அலைன்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் பெங்களூரு- சேலம்-கொச்சி, கொச்சி- சேலம் -பெங்களூருவுக்கும் தினமும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து நேற்று மதியம் 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை-சேலம் விமானம் எந்திர தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் சேலம் விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு வர வேண்டிய அந்த விமானமும் வரவில்லை. பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல், சேலம்-கொச்சி, மறுமார்க்கத்தில் கொச்சி-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய விமானங்கள் நேற்று வழக்கம்போல் இயக்கப்பட்டன என்றும், இன்று (திங்கட்கிழமை) சென்னை - சேலம் விமானம் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் சேலம் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-salem-flight-suddenly-cancelled




