சென்னை, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இருந்து மதுரைக்கும், பிரயாக்ராஜில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. மதுரையில் இருந்து இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கான்பூர் சென்டிரலில் இருந்து ஆகஸ்டு 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01925) 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரையை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து ஆகஸ்டு 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (01926) 3-வது நாள் காலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரலை சென்றடையும். 22 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் தமிழ்நாட்டில், திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். பிரயாக்ராஜில் இருந்து இதேபோல், பிரயாக்ராஜில் இருந்து ஆகஸ்டு 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) காலை 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04171) 3-வது நாள் மதியம் 1.15 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும். திருநெல்வேலியில் இருந்து மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்டு 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (04172) 4-வது நாள் அதிகாலை 3.30 மணிக்கு பிரயாக்ராஜ் சென்றடைகிறது. 19 பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். நாளை டிக்கெட் முன்பதிவு இதில், கான்பூர் சென்டிரல் - மதுரை இடையேயான சிறப்பு ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியிட்டது. பிரயாக்ராஜ் - நெல்லை இடையேயான சிறப்பு ரெயிலுக்கு டிக்கெட் முன்பதிவு நாளை (31-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-trains-between-kanpurmadurai-and-prayagrajnellai




