திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலத்தின்போது, பக்தர்களின் செல்போன்களை திருட முயன்றதாகக் கூறப்படும் கணவன்-மனைவி உள்ளிட்ட 3 பேரை சக பக்தர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களின் செல்போன்களை திருடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். இதையடுத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 3 பேரை பக்தர்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில், அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த இளைஞர் என தெரியவந்த நிலையில், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/three-people-including-a-couple-were-arrested-for-attempting-to-steal-devotees-mobile-phones-during-the-girivalam-procession-in-tiruvannamalai




