சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணியை சென்னையிலுள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் பி.கே. தெய்வசிகாமணி உள்ளிட்ட உழவர் அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். நன்றி அப்போது காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் சதித் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பரப்புரை பயணம் மேற்கொண்டது உள்ளிட்ட உழவர்களுக்கு ஆதரவான செயல்பாடுகளுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். ஆதரவு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உழவர் அமைப்புகள் சார்பில் நடத்தப்படவிருக்கும் நடைபயணத்திற்கும் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்றுக்கொண்ட அன்புமணி இராமதாசை, உழவர்கள் நலனுக்காக உழவர் அமைப்புகள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thank-you-for-mekedatus-awareness-campaign-farmers-organizations-met-and-congratulated-anbumani




