புதுடெல்லி, புற்றுநோய் மருந்து ஒன்றின் விலையை 10 மடங்கு அதிகமாக ரூ.27 ஆயிரம் என்று நிர்ணயித்து இருப்பது அப்பட்டமான பகல் கொள்ளை என்றும் அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. டாக்டர்கள் மீது நடவடிக்கை மருந்து நிறுவனங்கள், அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயிப்பதை தடுக்க உத்தரவு பிறப்பிக்கக்கோரி சுப் ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் விலை கட்டுப்பாட்டை கண்டிப்பாக உறுதி செய்யவும், மருந்து சில்லறை விற்பனையாளர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதை தடுக்கவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மூலக்கூறு மருந்துகளை பரிந்துரைக்காத டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது. சில்லறை விலை இந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்களில் ஒருவர், மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பது அவசியம் என்று கூறினார். மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், "மத்திய அரசும் ஒரு மனுதாரர்தான். இந்த மனுவை நாங்கள் எதிர்மறையாக கருதவில்லை” என்று கூறினார். பின்னர், நீதிபதிகள் கூறியதாவது:- ஒரு அத்தியாவசியமான புற்றுநோய் மருந்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.27 ஆயிரம் என்று அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த மருந்து, சில்லறை விற்பனையாளருக்கு ரூ.2 ஆயிரத்து 700-க்கு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டதை விட 10 மடங்கு அதிகமாக சில் லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கொள்ளை இல்லாவிட்டால், வேறு எது கொள்ளை? மக்கள் தங்களது வீடுகளையும், நகைகளையும் விற்று வைத்தியம் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும்போது. இது நோயாளிகளிடம் நடத்தப்படும் அப்பட்டமான பகல் கொள்ளை. முற்றிலும் வன்முறை வெறியாட்டம். படுகொலை என்றுதான் சொல்ல வேண்டும். மக்களை எப்படி இதுபோல் ஏமாற்ற முடியும்? நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனமாக இருப் பது இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து வழக்கு விசாரணையை 29-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/a-price-of-rs-27000-for-a-cancer-drug-is-blatant-daylight-robbery-supreme-court




