திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடிபோதையில் ரகளை செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. அவர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சென்ற அவர் மது போதையில் இருந்தார். அப்போது கொடைக்கானல் அண்ணா சாலையில் நின்றுகொண்டிருந்த வாலிபர்களை தாக்கினார். அதனால் அவருக்கும் வாலிபர்களுக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டது. போலீஸ்காரரின் ரகளை இதனால் போலீஸ்காரர் தங்கப்பாண்டியின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். மேலும் அங்கு வேலையில் இருந்த செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தங்கப்பாண்டி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த உபகரணங்கள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார். கைது- தற்காலிக பணிநீக்கம் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் தங்கப்பாண்டியை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீஸ்காரர் தங்கப்பாண்டி உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது தகுந்த துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dindigul-policeman-arrested-for-creating-a-ruckus-while-drunk




