"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் விஜய் மற்றும் அவரது குடும்பம் குறித்து பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம் நயினார் நாகேந்திரன் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நயினார் நாகேந்திரன் அதற்கு பதிலளித்த அவர், "தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு அநாகரீகமானது. அவர் நாகரிகமாகப் பேச வேண்டும். தமிழக அரசியலில் மறைமுக நட்பெல்லாம் வெளிப்படும் நேரம் இது. விரைவில் திமுக - பாஜக இடையேயான உறவு வெளிச்சத்துக்கு வரும். திமுகவினர் போல பாஜகவினரும் அவதூறாகப் பேசி வருகின்றனர். சத்தமின்றி சாதனைகளை நிகழ்த்தும் முதலமைச்சர் விஜய். "'உன் வேலையை நேசி, கற்றுக்கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங் மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டது மக்கள்தான். தவெகவினர் அல்ல. ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார். ராஜ்மோகன் - தவெக இதனைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது என்ற ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், "வாக்காளர்களுக்கு நல்ல சாவு வராது எனப் பேசுவதா? சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு இனிதான் நல்வாழ்வு வரப்போகிறது" என்று தெரிவித்திருக்கிறார். "பயமா? பதற்றமா?" - 11 மதுபானங்களுக்கு விதித்த தடையை வாபஸ் பெற்ற தவெக அரசு - அதிமுக கேள்வி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/minister-rajmohan-slams-nainar-nagendran-about-vijay




