சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி பெறும் மாணவ- மாணவிகளே மருத்துவ படிப்புகளில் சேர முடியும். அந்தவகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு அதற்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவை மருத்துவ கல்வி இயக்குனரகம் கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தொடங்கியது. மருத்துவ படிப்பில் சேர ஆர்வம் காட்டும் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். நேற்றுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது. ஏற்கனவே விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சுமார் 46 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனைத்தொடர்ந்து கலந்தாய்வு குறித்த அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 61,306 ஆக இருக்கும் நிலையில் 46 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/education-and-employment/intense-competition-for-medical-courses-46000-students-apply




