காபூல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அரிய வகை நோய் தாக்கி மரணம் அடைந்து உள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாபூர் ஜத்ரான் (வயது 38). இவருக்கு எச்.எல்.எச். என்ற அரிய வகை நோய் தாக்கியது. இதனால், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலன் பாதிப்பு இந்த நோய் தாக்கியவர்களின் எதிர்ப்பு சக்தி மண்டலம் பாதிப்புக்கு உள்ளாகும். இதற்காக கடந்த ஜனவரி முதல் அவர் சிகிச்சையில் இருந்துள்ளார். இளைய சகோதரர் கமய் ஜத்ரான் அவருடன் கூட இருந்து கவனித்து கொண்டார். இந்த நிலையில், உடல்நலன் பாதிக்கப்பட்டு ஷாபூர் உயிரிழந்த தகவலை அவருடைய சகோதரர் கமய் ஜத்ரான் தெரிவித்து உள்ளார். அவருடைய மறைவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இரங்கல் தெரிவித்து உள்ளது. இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர், 2009-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, 44 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/afghanistan-fast-bowler-dies-of-rare-disease




