நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியல் சாசனத் திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த மசோதா கடந்த கூட்டத் தொடரிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அரசியல் சாசனத் திருத்தத்துக்கு தேவையான நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் அது நிறைவேறவில்லை. தவெக அரசுக்கு ஆதரவு இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) அணியில் ஏற்பட்ட பிளவு, மேலும் இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியிருப்பது போன்ற அரசியல் மாற்றங்களால், இந்த முறை மசோதா நிறைவேறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சூழலில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இணையாது. இரு கட்சிகளின் கொள்கைகளும் முற்றிலும் வேறுபட்டவை என்பதால், அவை ஒன்றாகச் செயல்படும் சூழல் உருவாக வாய்ப்பில்லை.கடந்த 8-ம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது உண்மை. அதேபோல், தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். அந்த அரசில் எங்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாக உள்ளதும் உண்மைதான். திமுக எம்பிக்ளுடன் தொடர்பில் உள்ளோம் அதே நேரத்தில், திமுக எம்.பி.க்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். திமுக தலைமையுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. திமுக இன்னும் எதிர்க்கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. அது மத்தியில் ஆளும் கட்சியாகவோ அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினராகவோ மாறவில்லை. திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகளை நான் படித்தேன். அதிலிருந்து பாஜக - திமுக இடையே எந்தவித உடன்பாடும் இல்லை என்பது தெளிவாகிறது. தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, அதற்கு எதிராக திமுக நிற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/dmk-will-not-ally-with-nda-says-jairam-ramesh




