சென்னை, விடுமுறை முடிந்து சென்னை நோக்கி மக்கள் திரும்பி வருவதால் சிங்கபெருமாள் கோவிலில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகன நெரிசல்ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்கப் பலரும் சென்னையில் இருந்து கிளம்பி சென்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த பொதுமக்கள் சென்னை திரும்பி வருவதால், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குறிப்பாக, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சென்னை நோக்கி ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றதால், சென்னை திரும்பும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/people-returning-to-chennai-after-the-holidays-traffic-jam-for-2-km-at-singaperumal-temple




