கவுகாத்தி, அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட மாவட் டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எணணிக்கை நேற்று 68 ஆக உயர்ந்தது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரைகள், சாலை கள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளன. வெள்ளதால் 5 மாவட்டங்களில் 5.24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 மாவட்டங் களில் 354 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இடம்பெயர்ந்த 37 ஆயி ரத்து 724 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து, மக்கள் ஆண்டுதோறும் இத்தகைய துயரங்களை சந்திக்காத வகையில், அறிவியல் பூர்வமான தடுப்பு நடவடிக்கைகள், முன் கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/india/assam-floods-death-count-remains-at-68-over-5-lakh-people-affected




