பா.ஜ.கவின் புதிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் உத்தரப்பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க துணைத்தலைவராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர் ராம் மாதவ் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பா.ஜ.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராம் மாதவ் கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி அரசு பதவியேற்ற்போது ராம் மாதேவை பா.ஜ.கவிற்குப் பணியாற்ற ஆர்.எஸ்.எஸ். அனுப்பி வைத்தது. கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட ராம் மகாதேவ் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பாஜகவை விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். அசாம், திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக அரசுகளை அமைப்பதிலும், கட்சி அமைப்பை வலுப்படுத்துவதிலும் அவர் முக்கியப் பங்காற்றினார். ராம் மாதவ் காஷ்மீர் சர்ச்சையில் பதவி பறிப்பு ஜம்மு-காஷ்மீரில் பாஜக-பிடிபி கூட்டணி அரசு அமைக்கப்பட்டதில் அவர் முக்கியமாகச் செயல்பட்டார். இந்தக் கூட்டணியால் கட்சிக்கு அரசியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, பிடிபி உடனான உறவை பாஜக பின்னர் முறித்துக்கொண்டது. அப்போது ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், அம்மாநிலம் தொடர்பான சர்ச்சைகளில் மாதவை இழுக்க முயன்றார். இது அவரது அரசியல் பயணத்தைப் பாதித்தது. கடந்த 2020ம் ஆண்டு பா.ஜ.க தலைவராக இருந்த ஜெ.பி.நட்டா தனது தலைமையிலான கட்சி நிர்வாகிகளை அறிவித்தபோது அதில் ராம் மாதவ் இடம் பெறவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பணிக்குச் சென்றார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தேசியப் பொறுப்பு வழக்கப்பட்டது. மோடியால் மீண்டும் பதவி அவரது தற்போதைய பாஜக வருகை பா.ஜ.கவில் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும். அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. 2014-ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து பாஜகவிற்கு அவர் மாற்றப்பட்டபோது, அவருக்கு ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியிருந்தது. பிரதமர் மோடியும் அதற்கு உத்தரவாதம் கொடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் இப்போது இப்பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. தேசியத் துணைத் தலைவர் பதவி என்பது கட்சியின் அன்றாட அமைப்புரீதியான பணிகளில் ஈடுபடக்கூடியது கிடையாது. பொதுவாக இது மூத்த தலைவர்களுக்கே வழங்கப்படுகிறது. இருப்பினும், மாதவ் வெறும் பெயரளவிலான அல்லது சம்பிரதாயமான ஒரு பதவியுடன் மட்டும் இருக்க வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் நிதின் நபின் அவருக்கு இன்னும் முக்கியமான பொறுப்பு ஒன்றை வழங்கக்கூடும். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பிரச்சாரக் சுனில் பன்சால் பா.ஜ.க தேசியப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து இருப்பார். ராம் மாதவ் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர்களாக உத்தரகாண்டில் இருந்து தீரத் சிங் ராவத், ஒடிசாவைச் சேர்ந்த பைஜயந்த் பாண்டா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டி புரந்தேஸ்வரி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரேகா வர்மா மற்றும் பஞ்சாபில் இருந்து சர்தார் மன்பிரீத் சிங் பாதல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாரதி பிரவின் பவார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த லால் சிங் ஆர்யா, கர்நாடகாவைச் சேர்ந்த எம். நாகராஜ், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாரிக் மன்சூர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதுச்சந்தா கர் ஆகியோரும் தேசியத் துணைத் தலைவர்களாக உள்ளனர். பியூஷ் கோயல் முதல் ஸ்மிருதி இரானி வரை. - பாஜக-வில் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளபட்ட அதிரடி மாற்றங்கள் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/rss-leader-ram-madhav-gets-key-role-in-bjp-after-six-years




