கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். வாலிபருக்கு அரிவாள் வெட்டு கன்னியாகுமரி மாவட்டம், மருங்கூர் பகுதியை சேர்ந்த பகவதிகுமார் (வயது 34), டிரைவர். இவர் சம்பவத்தன்று மயிலாடியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மயிலாடியைச் சேர்ந்த நிதின், சுஜித், மயிலாடிபுதூரைச் சேர்ந்த ராஜகுமார், சாலைப்புதூரைச் சேர்ந்த பிரசாந்த் ஆகியோர் பகவதிக்குமாரை பார்த்து தகாத வார்த்தையால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த நிதின் உள்பட 4 பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் பகவதிகுமாரை சரமாரியாக வெட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். 4 பேர் கைது இதில் படுகாயமடைந்த பகவதிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பகவதிகுமார் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதின் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/kanyakumari-4-arrested-for-slashing-youth-with-sickle




