ராமேசுவரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வந்ததுடன், கடல் சீற்றமாக காணப்பட்டது. தடை இதனால் கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது. அனுமதி இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் வீசி வந்த காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ராமேசுவரத்தில் இன்று (புதன்கிழமை) காலை முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்துறை டோக்கன் அலுவலகத்தில் அனுமதி டோக்கன் பெற்று வழக்கம்போல மீன்பிடிக்க கடலுக்கு செல்ல உள்ளனர். இதே போல் மண்டபம் பகுதியிலும் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-in-rameswaram-and-mandapam-permitted-to-go-fishing-starting-today




