மதுரை, மதுரைக்கு திட்டங்களை தொடங்கி வைக்க சென்றுள்ள முதலமைச்சர், அருகில் உள்ள கடமலைக்குண்டில் வாழ்வாதாரத்திற்காக போராடும் மலைக்கிராம மக்களை நேரில் சந்திக்காமல் தவிர்ப்பது அவர்களுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஸ்ரீவில்லிபுத்துர் - மேகமலை புலிகள் காப்பகம் அறிவிப்பால் தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை பகுதியில் உள்ள தும்முக்குண்டு, காந்திகிராமம், வண்டியூர், பொம்மிராஜபுரம் என 98-க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்து தங்களின் நிலம், வீடு, தொழில் ஆகியவற்றோடு வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்கள் போராட்டம் இந்நிலையில், இன்று மதுரைக்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயண தூரத்தில் மட்டுமே உள்ள மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தும் கடமலைக்குண்டுவுக்கு சென்று அவர்களை சந்திக்காமல் தவிர்த்திருப்பது, நாளை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள வழக்கின் விசாரணையில் அரசு தங்களை கைவிட்டுவிடுமோ? என்ற பதற்றமும் அச்சமும் அம்மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. தமிழ்நாடு தான் என் வீடு, 8 கோடி தமிழக மக்கள் தான் என் சொந்தம், மக்களுக்கு நன்றி கடன் செலுத்தவே தான் அரசியலுக்கு வந்ததாக வீரவசனம் பேசிய முதலமைச்சர் விஜய், தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் மலைகிராம மக்களுக்கு செய்யும் நன்றி கடன் இது தானா? என போராடும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, மலைக்கிராம மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் மதுரை சென்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் அங்கிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் உள்ள கடமலைக்குண்டுவுக்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திடுவதோடு, நாளை வரவுள்ள வழக்கில் அம்மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையிலான வாதங்களை எடுத்துரைக்கவேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-this-a-debt-of-gratitude-to-the-people-of-the-hill-villages-ttv-dhinakaran-asks-chief-minister-vijay




