டோக்கியோ, ஜப்பானை தாக்கிய புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ஜப்பான் நாட்டை துஜுவன் என்ற புயல் தாக்கியது. அந்நாட்டின் ஐசு தீவை மையமாக கொண்டு தாக்கிய இப்புயல் கண்டோ, ஷிபா, கனகுவா, ஷிஷொகா உள்ளிட்ட மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. தலைநகர் டோக்கியோவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயலால் இம்மாகாணங்களில் கனமழையுடன், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். 16 லட்சம் பேர் பாதிப்பு இந்த புயல், கனமழை, வெள்ளத்தால் ஜப்பானில் 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து, மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 பேர் பலி இந்நிலையில், இந்த புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/typhoon-hits-japan-2-killed




