ஜகார்த்தா, அரசு முறை பயணமாக பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தோனேசியா பயணம் பயணத்தின் முதல் நாடாக பிரதமர் மோடி திங்கட்கிழமை இந்தோனேசியா சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்பட பல்வேறு துறைகளில் 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து ஜாவா தீவில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான பரம்பானன் கோவிலுக்கு (சிவன் கோவில்) பிரதமர் மோடி இன்று சென்றார். 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். மேலும், இந்தியாவின் துணையோடு மேற்கொள்ளப்பட உள்ள கோவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். ஆஸ்திரேலியா புறப்பட்ட பிரதமர் மோடி இந்நிலையில், இந்தோனேசிய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் சென்று இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வழியனுப்பி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/pm-modi-leaves-for-australia-after-indonesia-visit




