காஞ்சிபுரம், சங்கரா பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைசெய்து கொண்டார். நள்ளிரவில் மாணவ- மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூக்கில் பிணமாக தொங்கிய மாணவி காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூரில் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா வித்யாலயம் எனும் சங்கரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழக கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் என்ஜினீயரிங் படிப்புகளில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் தங்கி படிக்க பல்கலைக்கழக வளாகத்தில் விடுதிகளும் செயல்படுகிறது. மாணவிகள் விடுதி தனி அறையில் இ.சி.இ என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த நிகிதா (வயது 19) தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாணவியின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் பொன்னேரிகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் பல்கலைக்கழக விடுதிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். மாணவி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். சிக்கிய கடிதம் தற்கொலை செய்து 3 நாட்கள் வரை ஆனதால் துர்நாற்றம் வீசியது தெரிய வந்தது. நிகிதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி நிகிதாவின் அறையில் தீவிர சோதனை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர். போலீசாரின் சோதனையில் மாணவி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. மாணவர்கள் போராட்டம் அதில் தான் ஆசையாக காதலித்த காதலன் கடந்த சில நாட்களாக பேசாததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்தார். மாணவி நிகிதா உயிரிழந்த சம்பவத்தை அறிந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் சக மாணவ- மாணவிகள் நள்ளிரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நிகிதா எழுதிய கடிதம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் தெரிவித்ததையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். கல்லூரி நிர்வாகம் அலட்சியம் கடந்த 3 நாட்களாக அறையில் இருந்து மாணவி வெளியே வராத நிலையில், விடுதி நிர்வாகமோ, வகுப்புக்கு மாணவி வராததை கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. விடுதியில் தங்கி பாதுகாப்புடன் பயில பெற்றோர் கட்டணம் செலுத்தி வரும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவ- மாணவிகளை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி வருவது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. பெற்றோர்கள் கோரிக்கை கட்டணம் செலுத்தி கல்வி பயிலும் மாணவ- மாணவிகளை பாதுகாக்க அலட் சியம் காட்டியுள்ள பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி நிர்வாகம் மீது போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/female-student-commits-suicide-in-university-hostel-body-recovered-in-decomposed-state-students-stage-midnight-protest




