சென்னை, புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களை நியமனம் செய்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- கழகத் தோழர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பின்வருபவர்கள். துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். துணைப் பொதுச் செயலாளர்கள்: 1. MSM. ஆனந்தன் Ex Min, திருப்பூர் வடக்கு 2. M.C. சம்பத் Ex Min, கடலூர் 3. K. இராதாகிருஷ்ணன் Ex Min. உடுமலைப்பேட்டை 4. K.V. ராமலிங்கம் Ex Min, ஈரோடு மேற்கு 5. M. ஆனந்தன் Ex Min, உளுந்தூர்பேட்டை 6. கடம்பூர் ராஜு Ex Min. கோவில்பட்டி 7. K.T. பச்சைமால் Ex Min, கன்னியாகுமரி 8. வெல்லமண்டி N. நடராஜன் Ex Min, திருச்சி கிழக்கு 9. N.R. சிவபதி Ex Min, முசிறி 10. வைகைச்செல்வன் Ex Min, விருதுநகர் 11. S. வளர்மதி Ex Min, ஸ்ரீரங்கம் 12. Dr.J. சந்தீப் ஆனந்த், சென்னை 13. K.G. முத்து வெங்கடேஸ்வரன், திருப்பூர் 14. தொள்ளமூர் கண்ணன், விழுப்புரம் 15. VCR. குமரன். திருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலாளர் மேலும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் அவர்கள் மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும். பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள், பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக - தவெக முதல்-அமைச்சர் விஜயின் இந்த அறிவிப்பில், அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.விற்கு சென்ற 11 முன்னாள் அமைச்சர்களுக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/11-former-aiadmk-ministers-to-hold-deputy-general-secretary-posts-in-tvk




