சென்னை, தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார். நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விநியோக மானியத்திற்கான சிறப்புத் திட்டம் குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:- விவசாயிகளுக்கு இடுபொருட்கள் போதிய அளவில் குறித்த பருவத்தில் கிடைக்கச் செய்ய, இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. நெல் உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் முக்கியப் பங்களிப்பை வழங்கும் தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானியத்தினை 2026-2027ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் நலன் கருதி, முதல்-அமைச்சர் தாயுள்ளத்தோடு அறிவுறுத்தியபடி, விதைப்பண்ணைகள் அமைத்து 7,730 மெட்ரிக் டன் சான்று நெல் விதை உற்பத்தி செய்து தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமைக்கு வழங்கும் விவசாயிகளுக்கு. "நெல் விதை உற்பத்தி" மானியமும் 14,570 மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட விதைகளை மானியத்தில் விநியோகிக்க "நெல் விதை விநியோக மானியமும் வழங்குவதற்கு 2026-2027ஆம் ஆண்டில், ரூ.34 கோடியே 72 லட்சம் மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-scheme-for-paddy-seed-production-subsidy-rs-34-crore-allocated




