நீலகிரி, நீலகிரி மாவட்டம் ஓவேலி லாரஸ்டன் பகுதியில் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இருப்பினும், புலியை பிடிக்கும் வரை பொதுமக்கள் வெளியே தனியாக நடமாடக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர் வயல் கவலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள தேயிலை தோட் டத்தில் நேற்று மதியம் செடிகள் அசைவதை பெண்கள் கண்டனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் புலி ஒன்று தேயிலை செடிகளுக்கு இடையே நடமாடுவதை கண்டு பீதி அடைந்து கூச்சலிட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. மதிய வேளை என்பதால் வீட்டில் இருந்த பெண்கள் சத்தம் எழுப்பினர். இதனால் புலி அங்கிருந்து சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, புத்தூர்வயல் கவலை, விமல கிரி, மார்த்தோமா நகர் பகுதியில் நீண்ட காலமாக புலி ஒன்று நடமாடு கிறது. வழக்கமாக இரவில் உலா வரும் நிலையில் பட்டப்பகலில் வீட்டின் அருகே வந்து உள்ளதால் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nilgiris-after-oveli-tigers-also-roam-in-gudalur




