சென்னை, ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கிராமசபை கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மேகதாது அணை திட்டம் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் மேகதாது அணை திட்டத்திற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இந்த விவகாரத்தில், மொழி&இனவெறி அமைப்புகளால் தமிழ்நாட்டுக்கு எதிரான போராட்டங்களையும் கர்நாடக அரசு ஊக்குவித்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு எதிரான நல்லுறவை சிதைக்கும் வகையிலான கர்நாடக அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. குடிநீர் தேவை காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு நியாயமான காரணத்தை கூட கர்நாடக அரசால் கூற முடியாது. கர்நாடக தலைநகர் பெங்களூரின் குடிநீர் தேவையை நிறைவேற்றவே மேகதாது அணையை கட்ட முடிவு செய்திருப்பதாக கர்நாடக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணை மேகதாது அணைக்காக கர்நாடக அரசின் முன்வைக்கப்படும் ஒரே வாதம் இது மட்டும் தான். ஆனால், இந்த வாதம் தவறு என்பதற்கு பல காரணங்களை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கனவே முன்வைத்துள்ளது. பெங்களூருக்கு தேவையான அளவு குடிநீரை இப்போதுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து எடுத்துக் கொள்ள முடியும். கர்நாடக அதிகாரி மேகதாது அணை கட்டப்பட்டால், அதிலிருந்து 4 டி.எம்.சி நீரை பெங்களூருக்கு எடுத்து கொள்ளலாம் என்பது தான் கர்நாடக அரசின் திட்டமாகும். ஆனால், அதுவே தேவையில்லை என்ற குரல்கள் கர்நாடக அதிகாரிகள் மத்தியிலேயே எழுந்துள்ளன. மேகதாது அணை கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் பெங்களூர் நகரத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. கர்நாடக அரசின் திட்டம் பெங்களூரில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள டி.ஜி.ஹள்ளி எனப்படும் திப்பகன்டன ஹள்ளி அணையில் இன்றைய நிலையில் 2.2 டி.எம்.சி நீர் உள்ளது. 74 அடி உயரம் கொண்ட இந்த அணையில் அதிகபட்சமாக 3.4 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நீரை பெங்களூருக்கு கொண்டு செல்ல ஏற்கனவே குழாய் பாதைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணையின் நீரை பயன்படுத்திக் கொள்ள கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை. முறியடிக்கப்பட்டு விட்டது அதனால், மேகதாது அணை கட்டுவதை கைவிட்டு, டி.ஜி. அள்ளி அணையின் நீரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அம்மாநில அதிகாரிகளே தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம் மேகதாது அணையை கட்டுவதற்காக கர்நாடக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒற்றை வாதமும் முறியடிக்கப்பட்டு விட்டது. ஆனால், மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாட்டின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து நியாயங்களும் அப்படியே உள்ளன. பாலைவனமாகி விடும் மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கனவே கட்டப்பட்டுள்ள அணைகளின் கொள்ளளவான 114.57 டி.எம்.சியுடன், புதிய அணையின் 70 டி.எம்.சி கொள்ளளவையும் சேர்த்து மொத்தம் 184.57 டி.எம்.சி நீரை கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியும். அவ்வளவு நீர் தேக்கி வைக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு துளி நீர் கூட வராது. அப்போது காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் முற்றிலுமாக அழிந்து விடும். 5 கோடி தமிழக மக்கள் அதுமட்டுமின்றி, மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் 12500 ஏக்கர் பரப்பளவிலான வனப் பகுதிகள் மூழ்கி விடும்; இதனால் அந்த பகுதிகளில் வாழும் வனவிலங்குகள், மீன்கள், பறவைகள் உள்ளிட்ட அரிய விலங்குகள் அனைத்து அழிந்து விடும். 5 கோடி தமிழக மக்களையும், பெருமளவிலான அரியவகை உயிரினங்களையும் பாதிக்க கூடிய மேகதாது அணையை கட்ட ஒருபோதும் அனுமதிக்க கூடாது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக மத்திய அரசிடமும், கர்நாடக அரசிடமும் தமிழக அரசு இன்னும் வலிமையாக வாதாட வேண்டும். மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசுடன் ஒருபோதும் பேச்சு நடத்தக்கூடாது. மேகதாது அணைக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தி புதிய அணை கட்டும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கான வலிமையான அவை அடித்தட்டு மக்களும் பங்கேற்க கூடிய கிராம அவைகள் தான் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. கிராமசபை கூட்டங்கள் இந்தியாவின் 80-ம் ஆண்டு விடுதலை நாள் விழா வரும் ஆகஸ்ட் 15-ம் நாள் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அந்த நாளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டு,‘‘ காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தையும், தமிழ்நாடு முழுவதும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கக் கூடிய மேகதாது அணையை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். தீர்மானம் மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசால் தாக்கல் செய்யப்படவுள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ஏற்று கொள்ளக்கூடாது. மாறாக, மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசால் கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்’’ என்ற தீர்மானத்தை மக்கள் ஆதரவுடன் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/anbumani-urges-grama-sabha-to-pass-resolution-against-mekedatu-dam




