கீவ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்தார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக உக்ரைன், போலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெலன்ஸ்கி - ஜெய்சங்கர் சந்திப்பு அதன்படி, பயணத்தின் முதல் நாளாக அவர் நேற்று உக்ரைன் சென்றார். தலைநகர் கீவ் சென்ற வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, உக்ரைன் - ரஷியா போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்ட்ரி சிபிஹாவையும் ஜெய்சங்கர் சந்தித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர எந்த வித உதவியை செய்யவும் இந்தியா தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து உக்ரைன் பயணத்தை நிறைவு செய்த ஜெய்சங்கர் அங்கிருந்து போலாந்து புறப்பட்டு சென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/world/jaishankar-meets-ukraine-president-zelensky




