கோவை ஹோப் காலேஜ் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத கட்சி வேண்டும் என மக்கள் விரும்பினர். கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளில் த.வெ.க ஆட்சிக்கு வந்து இருக்கிறது. இடதுசாரி கட்சிகளின் ஆதரவு வெளியில் இருந்து தொடர்கிறது. மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என அளித்திருக்கும் தீர்ப்பை ஏற்க மறுத்துதான் இதுபோன்ற குதிரை பேரம், கழுதை பேரம் போன்றவற்றில் எல்லாம் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தி.மு.க-வால், ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்க முடியவில்லை. எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும், தாங்கள் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டுமென இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. பெ.சண்முகம் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என பேசியிருந்ததன் பின்னணி, என்ன என்பது இப்போதுதான் தெரிகிறது. அதற்காக தீவிரமான முயற்சியில் இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு தான் சட்டமன்ற உறுப்பினரை கோடிக்கணக்கில் விலை பேசியிருக்கும் செய்தி வந்துள்ளது. முறையாக வழக்குப்பதிவு செய்து, அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் தானாக விரும்பி ஒரு கட்சியில் சேர்வது, ஒரு கட்சியில் மாறுவது தமிழ்நாட்டில் சகஜமான விஷயம். விரும்பி கட்சி மாறுவது, விரும்பி கட்சி சேர்வது வேறு. ஆனால் இதுபோல கோடிக்கணக்கில் விலை பேசி ஒருவரை வாங்குவது என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். இதில் யார் சம்பந்தபட்டு இருந்தாலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெ.சண்முகம் நான்கு அ.தி.மு.க எம்.எல்.ஏகள் பதவியை ராஜினாமா செய்த போதே, இது ஆரோக்கியமற்ற அரசியல் என தெரிவித்தோம். அவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்தால், நீங்கள் ஏன் சேர்த்து கொள்கின்றீர்கள் என த.வெ.க நிர்வாகிகளிடம் கேட்டோம். டெல்லி பிரதிநிதி என்பவர் முதல்வரின் தனிபட்ட முடிவு. இதற்கு முன்பு இருந்த டெல்லி பிரதிநிதிகளும் முக்கிய முடிவுகளை எடுக்கவில்லை. இடதுசாரிகள் தனித்து செயல்படுவது என முடிவு செய்துள்ளோம். எந்த அணியிலும் இல்லை. தி.மு.க கூட்டணியில் இருந்தால் போற்றுவது, வெளியேறிவிட்டால் அவதூறு என்பது என நீண்டகாலமாக செயல்படுகின்றனர். முரசொலி கட்டுரைக்கு பதில் தீக்கதிரில் கொடுத்து இருக்கின்றோம். அதன் பின்பு முரசொலியில் எதுவும் வரவில்லை. கன்னியாகுமரி அணுகனிம சுரங்க திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்றார். 'அணுக்கனிமக் கொள்ளை; அனுமதி நீட்டிப்பு ஆணையைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும்'- சீமான் எச்சரிகை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/p-shanmugam-alleges-that-the-dmk-is-making-intense-efforts-to-topple-the-tvk-government-by-poaching-mlas




