சென்னை, தமிழ்நாட்டில் மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்களுக்கு புதிய மொபைல் போன் வாங்க ரூ. 10,000 வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக கட்டிடங்கள் என அனைவருக்கும் மின்சார வாரியம் பகிர்மானக் கழகம் மின்சாரத்தை வழங்கி வருகிறது. ஒவ்வோரு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மின்சார வாரியம் நிர்ணயித்து வருகிறது. மின்வாரியத்தின் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் துல்லியமாக மீட்டர் ரீடிங் எடுக்க மொபைல் போன் செயலியைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஊழியர்களின் பணியை எளிதாக்கவும், டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையிலும் ஊழியர்கள் புதிய மொபைல் போன், சிம் கார்டு வாங்குவதற்காக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் ரூ. 10,000 வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் ஊழியர்களுக்கு தங்குதடையற்ற இணைய சேவை மற்றும் அழைப்பு வசதிக்காக போஸ்ட் பெய்ட் சியுஜி சிம் கார்டுகளும் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் மீட்டர் ரீடிங் எடுக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு. நுகர்வோரின் மின் பயன்பாட்டு விவரங்களை உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யவும் வழிவகை ஏற்படுத்தப்படும். இருப்பினும், இந்தத் தொகையானது ஊழியர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட மாட்டாது என்றும், ஒருமுறை பெற்றுக் கொண்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த வசதியைப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/employees-who-take-electricity-readings-will-be-given-rs-10000-to-buy-a-cell-phone-tamil-nadu-government-announcement




