இன்று இந்தியப் பிரதமர் மோடியின் பிறந்தநாள். மோடி, ரஷ்ய அதிபர் புதின் அரசியலையும் தாண்டி நல்ல நண்பர்கள். கடந்த வாரம், ரஷ்ய அதிபர் புதின் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்திருந்தார். அப்போதும் இவர்களின் நட்பு நன்கு தெரிந்தது. இன்று மோடிக்கு புதின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருக்கிறார். இதை இந்தியாவில் இருக்கும் ரஷ்ய தூதரகம் ஷேர் செய்திருக்கிறது. புதின் - மோடிஅமெரிக்காவின் 100% வரி: "ஏற்கெனவே கூறியபடி மக்களின் நலன்தான்." - இந்தியாவின் பதில் என்ன? புதின் தனது வாழ்த்துச் செய்தியில், “உங்கள் நாட்டு மக்களிடையே உங்களுக்கு இருக்கும் மரியாதையும், சர்வதேச அரங்கில் உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய செல்வாக்கும் முற்றிலும் தகுதியானதே. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்புமிக்க மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் உங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கடந்த வாரம் நான் டெல்லி வந்திருந்த போது, எனக்கும் ரஷ்யக் குழுவிற்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்கும் உபசரிப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய பேச்சுவார்த்தைகள் வெளிப்படையானதாகவும், மிகுந்த பலனளிப்பதாகவும் அமைந்தன. எப்போதும்போல உங்களுடன் கலந்துரையாடியது எனக்குப் பெருமகிழ்ச்சி. நமது விவாதங்கள் உங்களுடைய அசாதாரண அரசியல் ஞானத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளன. நமது நட்பு நாடுகளின் நலனுக்காக, முக்கியமான இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களில் நமது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நாம் நிச்சயமாகத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார். BRICS: ஒன்றுகூடிய இந்தியா, சீனா, ரஷ்யா; ட்ரம்பிற்கு சொல்லும் Lesson! De Dollarisation புது வடிவிலா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/utin-wishes-modi-on-his-76th-birthday-praises-india-russia-ties



