திருச்சி, காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:- இந்தியாவில் யு.பி.ஐ. இலவசமாக இருப்பது அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் அழுத்தத்தின் காரணமாகவே மத் திய அரசு யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு வரி விதிக்கும் முடிவை எடுத்துள்ளது. இந்த வரி விதிப்பின் மூலம் ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம் கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடியும் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்துக்கு நிச்சயமாக தீர்வு கிடைக்கும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மேகதாதுவில் அணை கட்ட ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-not-allow-even-a-single-brick-to-be-laid-for-the-construction-of-the-dam-at-mekedatu-congress-mp-praveen-chakravarthy




