ஐதராபாத், ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இருமுடி கட்டு’ படம் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளது. இருமுடி கட்டு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவான திரைப்படம் இருமுடி கட்டு. சிவ நிர்வாணா இயக்கத்தில் ரிலீஸ் ஆன இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய் குமார், பேபி நக்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 21ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இருமுடி கட்டு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிராமங்களில் பெண் குழந்தைகள் தொடர்பான அநீதிகள், பாலியல் துன்புறுத்தல் போன்ற சமூகப் பிரச்சினைகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவற்றை பற்றி எடுத்துக்கூறும் வகையில் இத்திரைப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 250 கோடி வசூல் இந்நிலையில், இருமுடி கட்டு திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் படம் உலக அளவில் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ravi-teja-irumudi-kattu-crosses-rs-250-crore-box-office




