சென்னை, கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடங்களில் 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தொழில் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக சட்டசபையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- அரிசியின் தரம் குறைவு ”ரேஷன் கடைகளில் இலவசமாக கொடுக்கப்படும் அரிசி சாப்பிட முடியாத அளவுக்கு தரம் குறைந்துள்ளது. இதை தடுக்கவே உடனடியாக சன்னகர நெல்லின் உற்பத்தி விலையை ரூ.2,850 ஆக உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இந்த நெல் அதிமாக உற்பத்தி ஆகும்போது, இதை மக்களுக்கு கொடுங்கள். இதன் மூலமாக உணவு துறையில் தற்போது உள்ள அரிசியை விட நல்ல தரமான சன்னகர அரிசியை வழங்கும் நோக்கில் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக முதல்-அமைச்சர் கூறினார். கரும்பின் வீழ்ச்சி கரும்பு உற்பத்தி கடந்த 5 வருடங்களில் 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தொழில் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையை தொடர்ந்து விவசாயிகள் கரும்பை பயிரிடவில்லை எனில் தமிழ்நாட்டுக்கு தேவையான சர்க்கரை அளவு குறைந்து மராட்டியத்தில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை வந்துவிடும். கரும்பு விளைச்சலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ரூ.4,000 வழங்குவதாக நம் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த (தவெகவின்) 5 வருட கால ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக முதல்-அமைச்சர் உருவாக்குவார். சொன்னதை செய்வார்”. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvks-governance-will-be-a-golden-era-for-farmers-minister-aadav-arjuna




