கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் சுற்றுவட்டாரப் பகுதிகள் புழுதி மண்டலமாக இருக்கிறது. சிமெண்ட் துகள்கள் வீடுகள், வாகனங்கள், பொருட்கள், செடி, கொடிகள் என அனைத்தும் தூசி அடைந்து வெண்மை நிறமாக காட்சியளிக்கின்றன. இதனால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் குரும்பபாளையம் பகுதி மக்களின் உடல்நலமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோரி, கோவை - பாலக்காடு சாலையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம்' - தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “சிமெண்ட் ஆலை ஏசிசி நிறுவனத்திடம் இருந்தவரை புகையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாங்க. அதானி நிறுவனம் வாங்குன அப்புறம் இரவு, பகல் பார்க்காம அதிகளவுல புகையை வெளியேற்றுறாங்க. இதனால எங்க கிராமமே மூச்சு திணறுது. சிமெண்ட் தூசு ஊரு முழுக்க வீடு, மரம் செடி, கொடி, வண்டி எல்லாம் சிமெண்ட் தூசியா இருக்கு. இந்தப் புகை தூசினால கண் எரிச்சல், தொண்டை வலி, சளி இருமல் பாதிப்பு, தோல் அலர்ஜி, சைனஸ், நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், வயிற்று உபாதை நிறைய நோய் வந்திட்டே இருக்கு. எங்க வருமானத்துல பாதியை ஹாஸ்பிடலுக்கே செலவு பண்ண வேண்டியதா இருக்கு. டாக்டர்கிட்ட போன இந்த ஊருல நீங்க இருக்காதீங்க, காலி பண்ணிட்டு பக்கத்து ஊருக்குப் போனத்தான் உங்க பிரச்னை தீரும்னு சொல்லுறாங்க. சிமெண்ட் தூசு வீட்டோட கதவு, ஜன்னல் எல்லாத்தையும் மூடி வைச்சாலும், சிமெண்ட் தூள் உள்ளே வந்திடும். தரை மட்டுமில்லாம டிவி, பிரிட்ஜ், பாத்திரம்னு எல்லாத்திலும் வெள்ளை வெள்ளையா படிந்திடும். எவ்வளவு டைம் சுத்தப்படுத்தினாலும் போகாது. குடிக்கும் தண்ணீயில, சாப்பிடுற சாப்பாட்டுல கூட சிமெண்ட் தூசி விழுந்திடுது. கொஞ்ச நேரம் வீட்டுக்கு வெளியே நின்னா கூட, உடம்பு முழுக்க சிமெண்ட் தூசி அப்பிக்கும். இதனால நாங்க ரொம்ப சிரமப்படுறோம். மரம் செடிகள் மீது சிமெண்ட் துகள் படியுறனால எல்லாம் கருகி போயிடுது. மண்ணின் நிறமே மாறுனதால, விவசாயம் பாழாகிடுச்சு. இது சம்மந்தமா ஆலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்னு பல இடங்கள்ல புகார் சொல்லியும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பெயரளவுக்கு மட்டுமே ஆய்வு நடத்ததுறாங்க. நாங்க நிம்மதியா வாழவும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கணும்” என்றனர். "பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" - கனிமொழி கண்டனம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/villagers-in-coimbatore-are-facing-breathing-difficulties-due-to-adani-acc-cement-plant




