கூடலூர், கூடலூர் மார்க்கெட்டுகளுக்கு நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அங்கு ஒரு கிலோ நிலக்கடலை 100 ரூபாய்க்கு விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடலூர் மார்க்கெட்டு கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காபி, குறுமிளகு உள்ளிட்ட பணப்பயிர்களும், வாழை, மேரக்காய் உள்பட பல்வகை காய்கறிகளும் பெருமளவில் விளைகின்றன. இருப்பினும், வெங்காயம் உள்ளிட்ட சில வகையான காய்கறிகள் சமவெளிப் பகுதிகளில் இருந்துதான் தினமும் கூடலூர் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. நிலக்கடலை வரத்து அதிகரிப்பு இந்த நிலையில், கூடலூரில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு தற்போது நிலக்கடலை வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. மார்க்கெட்டுகளில் நிலக்கடலை கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வமுடன் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். வியாபாரிகள் தகவல் இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, "வழக்கமாக கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை பகுதியில் இருந்துதான் கூடலூருக்கு நிலக்கடலை விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால், அங்கு தற்போது போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவுவதால், நிலக்கடலை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தட்டுப்பாட்டை போக்க கோவை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து கூடலூர் மார்க்கெட்டுகளுக்கு நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளது" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/increase-in-groundnut-arrivals-to-kudalur-markets-sold-at-rs-100-per-kg




