கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 322 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டி இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா 322 இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் அலெக்ஸ் கேரி அதிகபட்சமாக 74 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் அந்த அணியின் கார்பின் போஷ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து, 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/sports/cricket/final-odi-australia-posts-322-runs




