சென்னை, காமராஜரின் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் மாணாக்கர்/ பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. கல்வியின் கதவுகளை திறந்தார் "ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க வேண்டும்" என்ற உயரிய கனவை நனவாக்க, தனது வாழ்நாளையே கல்விக்காக அர்ப்பணித்து ஆயிரக்கணக்கான புதிய பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி, ஏழை எளிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் கதவுகளை திறந்தார். அதன் விளைவாக பள்ளிகளில் மாணவர்சேர்க்கை உயர்ந்து, இடைநிற்றல் விகிதம் குறைந்தது. கல்வியைக் கொண்டாடுவோம் அத்தகைய கல்வி புரட்சியை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவின்படி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பவும், மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், செய்தி மக்கள் தொடர்புத் துறை "கல்வியைக் கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் பல்வேறு சிறப்பு போட்டிகளை நடத்தவுள்ளது. போட்டிகளின் விவரம் 1. வினாடி வினாப் போட்டி (Quiz Competition) பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்காக அளித்த பங்களிப்புகளைப் நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள் அறியும் நோக்குடன் இப்போட்டி பிரிவுகள்: 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு வரை 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு வரை 2. இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டி (Instagram Story) தற்போதைய சூழலில் சமூக வலைதளத்தின் ஆதிக்கம் மற்றும் பலம் அதிகரித்துள்ளதால் "மக்களை உருவாக்கிய மாமனிதர்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, படைப்பாற்றல் மிக்க ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போட்டியை (Instagram Story) உருவாக்கி பகிரவும். (பகிரப்பட்ட ஸ்டோரியின் ஸ்கிரீன்ஷாட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்). பிரிவு: அனைவருக்கும் பொதுவானது 3. காட்சிப் பலகை / ஓவியம் / புகைப்படப் போட்டி எல்லையற்ற கல்வி என்ற கருப்பொருளில், தொழில்நுட்பத்தின் துணையுடன் குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளும் எதிர்காலக் கல்வியை கற்பனை செய்து, அதை ஓவியமாகவோ, புகைப்படமாகவோ அல்லது Al (Artificial Intelligence) தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட காட்சிப் பலகையாகவோ அனுப்ப வேண்டும். பிரிவு: அனைவருக்கும் பொதுவானது. 4. ஏஐ தொழில்நுட்ப படைப்பு 2 Al Prompt 2 (Al Prompt Creation) பள்ளி மாணவர்களுக்கு: பெருந்தலைவர் காமராஜரை நேரில் சந்தித்தது போன்ற ஒரு தத்ரூபமான படத்தை ஏஐ (AI) மூலம் உருவாக்கி, அந்தப் படைப்புக்கான படைப்புடன் ('Prompt') சமர்ப்பிக்க வேண்டும். இப்படம் அவரது எளிமை மற்றும் கல்விப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு: பெருந்தலைவர் காமராஜரின் தொலைநோக்குப் பார்வை அல்லது தலைமைத்துவத்தைப் போற்றும் வகையில் ஒரு கவிதை அல்லது பொன்மொழியுடன் கூடிய ஒரு படைப்பை ஏஐ (Al) மூலம் வடிவமைத்து, அதற்கான படைப்புடன் ('Prompt') அனுப்ப வேண்டும். குறிப்பு: சிறந்த படைப்பு மற்றும் சிறந்தபடைப்புக்கு ('Prompt') பரிசுகள் வழங்கப்படும். 5. தனித்திறமைப் போட்டி (Special Talent Short Video) பெருந்தலைவர் காமராஜர் குறித்த தங்களது தனித்திறமைகளை 1.30 நிமிட காணொளியாக எடுத்து அனுப்ப வேண்டும். தலைப்புகள்: காமராஜருக்கு ஒரு கடிதம், நான் ஒரு நாள் கல்வி அமைச்சர், கல்வியே சிறந்த செல்வம், ஒரு புத்தகம் என் வாழ்க்கையை மாற்றியது, காமராஜரும் கல்விப் புரட்சியும். பிரிவு: பள்ளி மாணவர்கள் (PRE-KG முதல் 5-ஆம் வகுப்பு வரை). 6. குறும்படப் போட்டி (Short Film) கீழ்க்காணும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் குறும்படம் உருவாக்க வேண்டும்: தலைப்புகள்: 1. படிப்போம். படைப்போம்: கற்றல், சமத்துவம், நட்பு மற்றும் கனவுகளைப் போற்றும் வகையில் அமைய வேண்டும். 2. முதல் பட்டதாரி: முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் குழந்தையின் தாக்கம், குடும்பம் மற்றும் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்க வேண்டும். 3. கல்வி புத்தகத்தில் அல்ல, பண்பில் தெரியும்: கல்வியின் உண்மையான அர்த்தம் நம் நடத்தையிலும், பிறரை மதிப்பதிலும் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும். (குறிப்பு: குறும்படம் 3 முதல் 7 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்) பிரிவு: அனைவருக்கும் பொதுவானது. பின்குறிப்பு போட்டிகள் தொடர்பான சந்தேகங்களுக்கு kalviyaikondaduvom@gmail.com என்ற மின்னஞ்சலை அணுகலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் கீழ்க்கண்ட விரைவு துலங்கள் குறியீடு (QR code) வாயிலாக தங்களது படைப்புகளை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விதிமுறைகள் 1. வினாடி வினாப் போட்டி 1. 5-8, 9-10 மற்றும் 11-12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கான பிரிவில் மட்டுமே பங்கேற்க வேண்டும். 2. ஒவ்வொரு மாணவரும் ஒருமுறை மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். 3. ஒரே மாணவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்தால், முதல் பதிவு மட்டுமே பரிசீலிக்கப்படும். 2. இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிடுவது 1. "மக்களை உருவாக்கிய மாமனிதர்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி உருவாக்கப்பட வேண்டும். 2. ஸ்டோரியை தங்களது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கணக்கில் பதிவிட்டு, அதன் ஸ்கிரீன்ஷாட்டை போட்டிக்காக சமர்ப்பிக்க வேண்டும். 3. ஸ்டோரி 24 மணி நேரம் பொதுப் பார்வைக்கு (Public) இருக்க வேண்டும். 4. பிறரின் படைப்புகளை நகலெடுத்து (அ) பதிப்புரிமையை மீறும் (Copyright) உள்ளடக்கங்களைப் பயன்படுத்தக் கூடாது. 5. ஸ்டோரி (Story-யில்) போட்டி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக் ( முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/competitions-on-the-theme-lets-celebrate-education-on-the-occasion-of-kamarajs-birthday-tamil-nadu-government-notification




