காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அப்பதிவில், "ஒரு பெண் தன் அன்றாட வேலையைப் பார்த்துக்கொண்டு இயல்பாகச் செல்லும் வீடியோ ஒன்று. இந்த அளவிற்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பது அதன் பின்னணியில் உள்ள பலவீனமான, பிற்போக்குத்தனமான மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் எனக்கு இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை! பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மிகவும் இழிவான கருத்துகளைத் தெரிவிக்கும் பின்னணி கொண்ட ஒரு தலைவரின் ஆதரவாளர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தெளிவுபடுத்துவதற்காகக் கூறுகிறேன், அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் இல்லை. ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதில் என்ன பிரச்னை இருக்கப் போகிறது? ஒரு பெண்ணின் உடை, அவரது தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விமர்சனத்திற்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன? அமைச்சர் கீர்த்தனா எங்களது கொள்கைகள், ஆட்சி முறை அல்லது சாதனைகள் குறித்து எங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாதபோது, தலைவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்துப் போலிக் கதைகளை உருவாக்கத் தொடங்குகிறார்கள். நேர்மறையாகப் பங்களிக்க எந்தவொரு விஷயமும் இல்லாதவர்கள் கையாளும் மிகப்பழமையான ஆயுதமே பெண்களுக்கெதிரான வெறுப்புணர்வுதான்" என்று பதிவிட்டிருக்கிறார். "ஏன் நாங்க கோட்-சூட் போடக்கூடாதா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?" - கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.vikatan.com/government-and-politics/tvk-minister-keerthana-about-viral-video




