திருவேற்காடு, திருமணப் பொருட்கள் வாங்கச் சென்றபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். திருவேற்காடு அடுத்த புளியம்படு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள்கள் கீர்த்திகா (26). சர்மிளா (23). இருவரும் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தனர். கீர்த்திகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து, அக்டோபர் மாதம் திருமணம் நடை பெற உள்ளது. விபத்து இதற்காக அக்காள்-தங்கை இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக போரூரில் உள்ள கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அய்யப்பன்தாங்கல் அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சர்மிளா அதே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். கீர்த்திகா லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான அய்யப்பன் (50). என்ப வரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tragedy-strikes-while-shopping-for-wedding-items-young-woman-killed-after-being-hit-by-a-government-bus-2



