நெல்லை, தாமிரபரணி ஆறு மலைகளுக்கு நடுவே தவழ்ந்து வரும் இடத்தில் அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவி நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். குற்றாலம், மணிமுத்தாறு போன்ற அருவிகள் இருந்தாலும் அங்கு மழை பெய்யும் காலத்தில் மட்டுமே தண்ணீர் விழும். ஆனால், பாபநாசம் காரையாறு அணையில் இருந்து சீராக திறந்து விடப்படும் தண்ணீரால், அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் தண்ணீர் விழும். இந்நிலையில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் கடந்த 12-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றதால் கோவிலுக்கு அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பொதுமக்களின் நலன் கருதி அகஸ்தியர் அருவிக்கு10 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது 10 நாள் தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனை தொடர்ந்து, நாளை முதல் சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dies ist eine tamilische Kurzfassung zum schnellen Lesen. Für den vollständigen Bericht, mehr Kontext und Aktualisierungen besuchen Sie die Originalquelle.
Vollständigen Artikel lesen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-bathing-in-agasthiyar-waterfall-is-allowed-from-tomorrow




